2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

சந்தேகத்துக்கிடமானவர்கள் நடமாடினால் அறிவிக்கவும்

Suganthini Ratnam   / 2016 ஏப்ரல் 06 , மு.ப. 04:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.ஹனீபா

அம்பாறை, அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் அண்மைக்காலமாக திருட்டுச் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இந்நிலையில், இப்பிரிவில் சந்தேகத்துக்கிடமானவர்கள் நடமாடினால் உடனடியாக பொலிஸாருக்கு அறிவிக்குமாறு அக்கரைப்பற்று பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஏ.எல்.எம்.ஜெமில், இன்று புதன்கிழமை கேட்டுக்கொண்டுள்ளார்.

அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு, அட்டாளைச்சேனை, பாலமுனை, ஒலுவில் ஆகிய பிரதேசங்களிலுள்ள கடைகள், வீடுகள் இரவு வேளைகளில்; உடைக்கப்பட்டு திருட்டுச் சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றன. இத்திருட்டுச் சம்பவங்களைக் கட்டுப்படுத்துவதற்கு இரவு வேளைகளில் சிவில் உடையில் விசேட பொலிஸ் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன், இதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.  

வீடுகளில் பணம் மற்றும் தங்கநகைகள் வைப்பதைத் தவிர்த்து வங்கிகளில் வைக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.  
 மேலும், இத்திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்களை கைதுசெய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X