2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

சந்திப்பு

Suganthini Ratnam   / 2015 ஒக்டோபர் 30 , மு.ப. 04:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பைஷல் இஸ்மாயில்

கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம்.நஸீரை சாய்ந்தமருது அல் ஹிலால் வித்தியாலய அதிபர் உள்ளிட்ட குழுவினர் நேற்று வியாழக்கிழமை இரவு சந்தித்துச் கலந்துரையாடினர்.

இச்சந்திப்பின்போது சாய்ந்தமருது அல் ஹிலால் வித்தியாலயத்தின் குறைபாடுகள் பற்றி இக்குழுவினரினால் எடுத்துரைக்கப்பட்டது.

எதிர்காலத்தில் வித்தியாலயத்தின் அபிவிருத்தி தொடர்பில் தன்னாலான உதவிகளை  செய்து தருவதாக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர்; தெரிவித்தார்.

கிழக்கு மாகாண சுகாதார அமைச்சரின் இல்லத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பில்  வித்தியாலயத்தின் அதிபர் எம்.எஸ்.எம்.பைஷல், முன்னாள் அதிபர் ஜே.சி.ஏ.மஜீட், பிரதி அதிபர் எம்.எம்.இப்றாகிம் மற்றும் ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்திக் குழுவினர் உள்ளிட்ட பலர் இதில் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .