Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2020 ஏப்ரல் 20 , மு.ப. 01:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சகா
கொரோனப்பாதிப்பால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் பின்தங்கிய கோரக்கர் கிராமத்துக்கு, வரலாற்றுப் பிரசித்திபெற்ற சம்மாந்துறை தமிழ்க்குறிச்சி ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலயம் உலருணவுப் பொதிகளை வழங்கிவைத்தது.
பொருளாதார வளம் குன்றிய ஆலயமாகவிருந்தபோதிலும் சம்மாந்துறை ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலய நிருவாகசபையினர் 2 இலட்சம் ரூபாய் நிதியை ஒதுக்கி அதற்கு 200 உலருணவுப் பொதிகளை பொதிசெய்து, கோரக்கர் கிராமத்திலுள்ள தமிழர் முஸ்லிம்கள் வாழும் சகல வீடுகளுக்கும் காலடியில் சென்று வழங்கிவைத்தனர்.
ஆலய பரிபாலன சபைத் தலைவர் சீ.சுப்பிரமணியம், செயலாளர் யோ.கிருண்ணமூர்த்தி, பொருளாளர் எஸ்.கனகராசா, அதிபர் ந.சுந்தரநாதன் மற்றும் சிறப்பு அழைப்பாளர்களான காரைதீவின் சமூக செயற்பாட்டாளர்கள் கே.ஜெயசிறில், வி.ரி.சகாதேவராஜா உள்ளிட்ட பிரமுகர்கள் அதனை வழங்கிவைத்தனர்.
கோரக்கர் கிராம இளம் விஞ்ஞானி சோ.வினோஜ்குமார், கோரக்கர் கிராமத்தின் முதல் பட்டதாரி சோ.தினேஸ்குமார், ஆலய தலைவர் மோகன், இளைஞர்கள் இச்சேவைக்குப் பக்கபலமாக பரி பூரணமான ஒத்துழைப்பை நல்கினார்கள்.
இந்து ஆதீனங்கள், இந்து மதகுருமார் அமைப்புகள் விடுத்த வேண்டுகோள் நிமித்தம் நெருக்கடிமிக்க இன்றைய காலகட்டத்தில் இவ் ஆலய நிருவாகிகள் முன்வந்து இவ் மனிதாபிமானப் பணியினை ஊரடங்குவேளையையும் பாராது மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
21 minute ago
27 minute ago
31 minute ago