Janu / 2023 நவம்பர் 07 , பி.ப. 12:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
சம்மாந்துறை பிரதேசத்தில் டெங்கு நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் டெங்கு நுளம்பு பரவக் கூடிய வெற்றுக் காணிகளை வைத்திருப்போர் ஒரு வார காலத்திற்குள் காணிகளை துப்பரவு செய்யுமாறு, சம்மாந்துறை சுகாதார வைத்தியதிகாரி டாக்டர் எஸ்.ஐ.எம். கபீர் செவ்வாய்க்கிழமை (07) தெரிவித்துள்ளார்.
தற்போது அம்பாறை மாவட்டத்தில் பருவ மழை பெய்து வருவதனால் பொது மக்கள் விழிப்புடன் செயல்படுமாறும், பாடசாலைகள், மதஸ்தலங்கள், அரச, தனியார் நிறுவனங்கள் ஆகிய வற்றில் சிரமதான பணிகளை முன்னெடுக்குமாறும் அறிவித்துள்ளார் .
டெங்கு நுளம்பு பரவாமல் தடுக்க பொதுச் சுகாதார பரிசோதகர்கள், டெங்கொழிப்பு செயலணி மற்றும் பொலிஸார் இனைந்து வீடு வீடாகச் சென்று டெங்கு நோய் தொடர்பாக விழிப்பூட்டல், துண்டுப்பிரசுரம் மூலம் மற்றும் ஒலிபெருக்கி ஊடாகவும் அறிவித்தல் விடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் டெங்கு நுளம்பு பரவக் கூடிய இடங்களை வைத்திருப்பவர்கள் துப்பரவு செய்யுமாறும் அதனை மீறுபவர்களுக்கெதிராக நீதிமன்றினூடாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
எம்.எஸ்.எம். ஹனீபா
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .