2025 மே 03, சனிக்கிழமை

சம்மாந்துறையில் 12 பேருக்கு தொற்று

Princiya Dixci   / 2020 டிசெம்பர் 21 , பி.ப. 04:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

சகா

கல்முனைப் பிராந்தியத்துள் வரும் சம்மாந்துறை சுகாதார சேவைப் பிரிவில் இதுவரை 12 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. 

கிழக்கு மாகாணத்தில் அதி கூடிய தொற்றாளர்களாக கல்முனைப் பிராந்தியத்தில் இதுவரை சுமார் 600 பேருக்கு கொரானா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இந்த 600க்குள் சம்மாந்துறையில் 12 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.

இவர்களில் இருவர், அக்கரைப்பற்று கொத்தணி மூலம் தொற்றுக்குள்ளானவர்கள் எனவும் ஏனையவர்கள் கொழும்பிலிருந்து வந்தவர்களாலும் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். 

சம்மாந்துறை மக்கள் விழிப்புணர்வுடனும் பாதுகாப்பாகவும் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றுபவர்களாகவும் உள்ளனர் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். 

சம்மாந்துறையில்  இதுவரை 568 பேருக்கு பிசிஆர் மற்றும் அன்ரிஜன் சோதனைகள் செய்யப்பட்டுள்ளன. அத்துடன், 121 பேர் அவர்களது வீடுகளில் சுய தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X