Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 07, திங்கட்கிழமை
Princiya Dixci / 2015 நவம்பர் 12 , மு.ப. 04:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
-அஸ்லம் மௌலானா
சமூக சேவைத் திணைக்களத்தினால் வழங்கப்படுகின்ற பொதுசன மாதாந்த உதவிக் கொடுப்பனவை எதிர்வரும் 2016ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தில் அதிகரிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அம்பாறை மாவட்ட சமூக நல ஒன்றியம் கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பில் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் நிதி அமைச்சர் ஆகியோருக்கு ஒன்றியத்தின் செயலாளர் இப்னு ஷெரீப், நேற்று புதன்கிழமை (11) கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளார்.
அக்கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
அரச ஊழியர்கள் உட்பட சகல தரப்பினரதும் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் அவ்வப்போது அதிகரிக்கப்பட்டு வருகின்ற போதிலும் பொதுசன உதவி பெறுவோருக்கான மாதாந்த உதவுத்தொகை தொடர்ந்தும் குறைந்த அளவிலேயே இருந்து வருகின்றது.
இதனால் முதுமை, இயலாமை என்பவற்றுக்கு மத்தியில் தற்போதைய வாழ்க்கைச் செலவுடன் அவர்கள் கடுமையாகப் போராட வேண்டியிருகிறது. நாட்டில் அவர்களே மிகக் குறைந்த அரச உதவித் தொகையினைப் பெற்று வருகின்றனர். இது மிகவும் கவலைக்குரிய விடயமாகும்.
இந்த நல்லாட்சியிலாவது தமது வாழ்க்கைச் செலவை ஓரளவு ஈடு செய்யும் வகையில் அக்கொடுப்பனவை அதிகரிக்க வேண்டும் என அவர்கள் எதிர்பார்க்கின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
9 hours ago