2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

சம்பளமற்ற விடுமுறையை வழங்கக் கோரிக்கை

Suganthini Ratnam   / 2015 டிசெம்பர் 16 , மு.ப. 10:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பைஷல் இஸ்மாயில்

புனித ஹஜ் யாத்திரைக்காக நாட்டுக்கு வெளியே விடுமுறையில் செல்ல சம்பளமற்ற விடுமுறையை வழங்குமாறு இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கத்தின் தேசியத்தலைவர் மன்சூர் அனஸ் இன்று  புதன்கிழமை கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில், 'அரச சேவையில் இருக்கும் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் நாட்டுக்கு வெளியே செல்லும்போது சம்பளமற்ற விடுமுறையை அனுமதிக்கவேண்டும். இது அவ்வாறில்லாமல் தாபன விதிக்கோவைக்கு முரணாக விடுமுறை கோரப்படும் நாட்களின் அளவு, சேமித்த பிணி விடுமுறை கோரும் நாட்டில் இருக்கும் எங்களுக்கு அதிலும் விசேடமாக வேறெந்த மாகாணத்திலும் இல்லாத விதிகளை கிழக்கு மாகாண சபை விதித்துள்ளது.  

இதனால், போதிய சேமித்த பிணி விடுமுறை இல்லாத கிழக்கு மாகாணப் பாடசாலை அதிபர், ஆசிரியர்களுக்கு தமக்கு விதியான ஹஜ் கடமையை சம்பளமற்ற விடுமுறையில் நாட்டுக்கு வெளியே சென்று நிறைவேற்ற முடியாத நிலைமையில் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றோம். அவ்வாறு போதிய பிணி விடுமுறையின்றிச் செல்பவர்கள் பதவியிலிருந்து பணி நீக்கம் செய்யப்பட்டும் அபாய நிலைமைக்கும் ஆளாகி வருகின்றோம்.

தாபன விதிக் கோவையின் அத்தியாயம் 23:1 மற்றும் 23:2 உப விதிகளுக்கு முற்றிலும் முரணாக இந்த விதிகள் அமைந்து காணப்படுகின்றன. இந்த விதிகள் யாவும் முன்னாள் ஆளுநரின் காலத்தில் உருவாக்கம் செய்யப்பட்டதாகவும் அவர் கூறினார்.

இந்த சட்ட விதியை நல்லாட்சி அரசு தொடர விடாமல் இதற்கான நல்ல தீர்வினை தர முன்வரவேண்டும். அத்துடன், தாபன விதிக்கோவையிலுள்ள குறித்த உபவிதிகள் முழுமையாக அமுல்படுத்தப்படல் வேண்டும். இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு போதிய நிவாரணம் வழங்கப்படவேண்டும' என்றார்.

மேலும் இது தொடர்பிலான கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்றினையும் கிழக்கு மாகாண முதலமைச்சருக்கு அனுப்பி வைத்துள்ளாதாவும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X