2025 மே 20, செவ்வாய்க்கிழமை

சம்மாந்துறையில் இரு உணவகங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

Kogilavani   / 2016 மே 05 , மு.ப. 11:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம். ஹனீபா

அம்பாறை, சம்மாந்துறை பிரதேசத்தில் நுகர்;வுக்கு பொருத்தமில்லாமலும், உணவுச் சுகாதாரம் பேணப்பாடாமலும் கழிவுகள் ஒழுங்கான முறையில் அகற்றப்படாமல் காணப்பட்ட இரண்டு உணவகங்கள் மூடப்பட்டுள்ளாதாக சம்மாந்துறை சுகாதார வைத்தியதிகார டாக்டர்; எம்.எம்.எம். சதீர்; இன்று தெரிவித்தார்.

சம்மாந்துறை பிரதேசத்தில் சுகாதார அதிகாரிகளும் மற்றும் பொதுச் சுகாதார பரிசோதகர்களும் இன்று (05), உணவகங்கள் மற்றம் வெதுப்பகங்கள்; போன்றவற்றில் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பின் போதே மேற்படி உணவகங்கள் மூடப்பட்டுள்ளன.

இவ் உணவகங்களின் ஊரிமையாளர்;களுக்கொதிராக சம்மாந்துறை நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டதையடுத்து இவ்விரு உணவகங்களையும் மூடுமாறு நீதிமன்றினால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாகவும் இதற்கமைய இரு உணவகங்களையும் மூடியுள்ளதாகவும் எம்.எம்.எம். சதீர் மேலும் கூறினார்.

மேலும், சுகாதாரம் பேணப்பாடாமலும் சட்ட திட்டங்களை கடைப்பிடிக்காமலும் மாட்டிறைச்சியை விற்பனை செய்த நான்கு உரிமையாளர்களுக்கெதிராகவும் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செயயப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்;.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X