எஸ்.கார்த்திகேசு / 2019 பெப்ரவரி 13 , பி.ப. 05:03 - 0 - {{hitsCtrl.values.hits}}

அம்பாறை – பொத்துவில் 14, பாக்கியவத்தை கிராமத்தைச் சேர்ந்த ஏழு பிள்ளைகளின் தாயான, 102 வயதைக் கடந்த சிரேஷ்ட பிரஜை முகைதீன்பாவா பாத்தும்மா, பொத்தவில் பிரதேச செயலகத்தின் சமூக சேவைப் பிரிவால் காசோலை வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்.
பொத்துவில் பிரதேச செயலகத்தின் ஒன்றுகூடல் மண்டபத்தில் இன்று (13) நடைபெற்ற இந்நிகழ்வில், பொத்துவில் பிரதேச செயலாளர் எம்.ஏ.சி. அஹமட் நஸீல், வைபவ ரீதியாக 10 ஆயிரம் ரூபாய் பெறுமதியான காசோலையை வழங்கினார்.
நூறு வயதைக் கடந்த பிரஜைகளைக் கௌரப்படுத்தும் அரசாங்கத்தின் திட்டத்தின் ஊடாக, சமூக சேவைகள் அமைச்சின் தொழில், தொழிற்சங்க மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சால், இந்த சிரேஷ்ட பிரஜைக்கு, இக்காசோலை வழங்கப்பட்டுள்ளதுடன், தொடர்ந்து மாதாந்தம் 5,000 ரூபாய் வழங்கப்படவுள்ளது.
9 hours ago
20 Dec 2025
20 Dec 2025
20 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
20 Dec 2025
20 Dec 2025
20 Dec 2025