Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2016 ஜூலை 28 , பி.ப. 12:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.ஹனீபா
கிழக்கு மாகாணத்தில் சுகாதாரத்துறையை அபிவிருத்தி செய்வதற்காக 1,000 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம். நஸீர் தெரிவித்தார்.
அக்கரைப்பற்று மாவட்ட வைத்தியசாலையின் பற்சிச்சைக் கூடத்துக்கு உபகரணங்கள் வழங்கி வைத்தலும் நோயாளர் விடுதி கட்டடத் தொகுதி திறப்பு விழாவும் இன்று வியாழக்கிழமை நடைபெற்றபோதே, அவர் இதனைக் கூறினார்.
அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்;, 'நாட்டில் சிறந்த சுகாதார சேவையை வழங்கி இலங்கையை சிறந்த நாடாக கட்டியெழுப்புதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றார்கள். அந்த வகையில் கிழக்கு மாகாண சுகாதாரத்துறை அபிவிருத்தி அடையவுள்ளது.
கட்டடம் திறந்து வைப்பதாலும், வைத்திய உபகரணங்கள் வழங்குவதாலும் வைத்திய சேவையை ஒரு போதும் வளர்ச்சியடைந்ததாக கருத முடியாது. அதற்காக வைத்தியர்கள், வைத்தியசாலையில் கடமையாற்றும் உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் அனைவரும் ஒன்றினைந்து பொதுமக்களுக்கு சிறந்த சேவை செய்வதன் மூலமே சுகாதாரத்துறையை வளர்சியடைய வைக்க முடியும்.
அக்காரைப்பற்று பிரதேசத்தில் மிகவும் பழமை வாய்ந்த இவ்வைத்தியசாலை மக்களுக்கு சிறந்து சேவையை வழங்கிவரும் வைத்தியசாலையாக காணப்படுகின்றது' என்றார்.
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago