Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Niroshini / 2015 செப்டெம்பர் 21 , மு.ப. 11:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.கார்த்திகேசு
அம்பாறை, திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சாகாமம் கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை(20) இரவு காட்டு யானைகள் இரண்டு உட்புகுந்து குடியிருப்புகளை சேதப்படுத்தியுள்ளன.
இப்பகுதியில் காட்டு யானைகளின் ஊடுறுவல் அதிகரித்துள்ளதால் தமது வீடுகளுக்கும் சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுவதுடன் உயிர் வாழ்வதற்கும் அச்சுறுத்தலாக இருப்பதாக கிராமவாசிகள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
எனவே, சம்பந்தப்பட்டோர் இப்பிரச்சினையை கவனத்தில் கொண்டு தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள யானை வேலி அமைக்கும் பணிகளை மிக விரைவாக பூர்த்தி செய்து எமது உயிரை பாதுகாப்பதற்கான நடவடிக்கை எடுக்குமாறு பிரதேசவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பில், அக்கரைப்பற்று,திருக்கோவில் மற்றும் பொத்துவில் வன ஜீவராசிகள் திணைக்களத்தின் அதிகாரி ஏ.ஏ.ஹலீம் கூறுகையில்,
இப்பிரச்சினைகள் தொடர்பாக தமக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.அதற்கு அமைவாக இன்று திங்கட்கிழமை இரவு இப்பகுதியில் உள்ள யானைகளை காட்டுக்கு விரட்டுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
காட்டு யானைகளினால் சேதமாக்கப்பட்ட வீட்டு உரிமையாளர்களுக்கு நட்டஈடுகள் வழங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளது.
இதேவேளை, திருக்கோவில் பிரதேச கிராமங்களுக்கு காட்டு யானைகள் ஊடுவதை தடுப்பதற்கான மின்சார வேலிகள் அமைக்கும் வேலைகள் தற்போது இடம்பெற்று வருகின்றன. இதனை விரைவுபடுத்தி முடிந்தளவு இவ்வருடத்துக்குள் பூர்த்தி செய்யப்படும் என்றார்.
25 minute ago
57 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
57 minute ago
2 hours ago
2 hours ago