2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

சீமெந்து மானியம் வழங்கும் நிகழ்வு

Niroshini   / 2015 டிசெம்பர் 01 , மு.ப. 06:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பைஷல் இஸ்மாயில்

அம்பாறை,கல்முனை பிரதேசத்தில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு சீமெந்து மானியம் வழங்கும் நிகழ்வுகள்  வியாழக்கிழமை(03) கல்முனை, சாய்ந்தமருது மற்றும் கல்முனை தமிழ் ஆகிய பிரதேச செயலக காரியாலயங்களில் இடம்பெறவுள்ளன.

வீடமைப்பு அமைச்சினால் மாவட்டத்தில் தெரிவுசெய்யப்பட்ட ஆயிரம் ரூபாவுக்கு குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு சீமெந்து மானியம் வழங்கும் திட்டத்தின் கீழ், கல்முனை தேசிய வீடமைப்பு அதிகார சபைக் காரியாலயத்தின் ஏற்பாட்டில் இடம்பெறவுள்ள இந்நிகழ்வுகளில் ,விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு சீமெந்து மானியத்தை வழங்கி வைக்கவுள்ளார்.

இந்நிகழ்வுகள் காலை 9.30 மணிக்கு சாய்ந்தமருது பிரதேச செயலகத்திலும் காலை 10.30 மணிக்கு கல்முனை பிரதேச செயலகத்திலும் காலை 11.30 மணிக்கு கல்முனை தமிழ் பிரதேச செயலகத்திலும் இடம்பெறவுள்ளன.

இத்திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்கு தலா 10  சீமெந்து பக்கட்டுக்கள் மானியமாக வழங்கப்படவுள்ளன.

இதற்கமைய, சாய்ந்தமருது பிரதேச செயலகப் பிரிவில் 58 குடும்பங்களுக்கும் கல்முனை பிரதேச செயலகப் பிரிவில் 60 குடும்பங்களுக்கும் கல்முனை தமிழ் பிரதேச செயலகப் பிரிவில் 48 குடும்பங்களுக்கும் சீமெந்து பக்கட்டுக்கள் வழங்கப்படவுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .