Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2015 டிசெம்பர் 11 , மு.ப. 05:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
-பைஷல் இஸ்மாயில், ரீ.கே.றஹ்மத்துல்லா
அட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட 32 கிராம அலுவலர் பிரிவுகளில் வசிக்கின்ற 56 குடும்பங்களுக்கு சீமெந்து பக்கெட்டுகள் நேற்று வியாழக்கிழமை மாலை வழங்கப்பட்டன.
அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் ஐ.எம்.ஹனிபா தலைமையில் பிரதேச செயலக கூட்ட மண்டபத்தில் பயனாளிகளுக்கு கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.முஹம்மட் நஸீர் சீமெந்து பக்கெட்டுகளை வழங்கிவைத்தார்.
அம்பாறை மாவட்டத்தில் தெரிவுசெய்யப்பட்ட 1,000 வறிய குடும்பங்களின் வீட்டுப் பூச்சு வேலைக்காக தலா குடும்பத்துக்கு 10 சீமெந்து பக்கெட்டுகள் படி, வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சின் ஏற்பாட்டில் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் சீமெந்து பக்கெட்டுகள் வழங்கப்படுகின்றன.
இவ்வாறு வீட்டுப் பூச்சு வேலைகளுக்காக வழங்கப்படுகின்ற இந்த சீமெந்து பக்கெட்டுகளை யாராவது விற்பனை செய்ய முனைந்தால் விற்பனை செய்கின்றவர்களுக்கும் அதை வாங்குபவர்களுக்கும் எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென அம்பாறை மாவட்ட கரையோர வீடமைப்பு முகாமையாளர் ஏ.அஸீஸ் தெரிவித்தார்.
54 minute ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
54 minute ago
3 hours ago
3 hours ago