Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2015 டிசெம்பர் 18 , மு.ப. 10:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.கார்த்திகேசு
அம்பாறை, திருக்கோவில் பிரதேசத்தில் கிராம மட்ட மற்றும் பிரதேச ரீதியிலான உணவு உற்பத்தி பிரதேச செயல்திட்ட குழுக்களின் செயலமர்வு அப்பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.
இதன்போது பிரதேச செயலாளர் மற்றும் சுகாதார வைத்திய அதிகாரியின்; தலைமையின் கீழ் பிரதேச குழுவும் கிராம சேவகர்கள் மற்றும் பொதுச் சுகாதார பரிசோதகர்கள், மருத்துவமாதுக்கள் ஆகியோரின் முன்னெடுப்பில் கிராமமட்ட குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளன.
அந்த வகையில் பிரதேச குழுவின் கீழ் 22 கிராம மட்ட கிராமிய மட்ட பலநோக்கு போசாக்கு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இக்குழுக்களின் ஊடாக கிராமமட்ட போசாக்கு மேம்பாட்டு வேலைத்திட்டங்களை 2016ஆம் ஆண்டு தொடக்கம் 2018ஆம் ஆண்டு வரையுள்ள இரண்டு ஆண்டுகளில் இலங்கையின் போசாக்கு மட்டத்தினை கூட்டுவதற்கான ஒரு செயற்திட்டமாக அரசு முன்னெடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்ளூர் விவசாய உற்பத்திகளை அதிகரித்தல், போசாக்கு குறைந்த கிராமங்களை கண்காணித்தல், மேம்பாட்டுக்கான செயற்றிட்டங்களை முன்னெடுத்தல் மற்றும் வீட்டு தரிசிப்புக்கள் மூலம் மக்களின் போசாக்கு உணவுகள் பற்றிய விழிப்புணர்வுகளை முன்னெடுத்தல், பிரதேசத்தின் தேவைகள், பிரச்சினைகள் அடையாளப்படுத்தப்பட்டு அவற்றுக்கான தீர்வுகளை குழுக்களின் மூலம் தீர்வு காணல், மாதாந்த செயற்பாடுகள் தொடர்பான அறிக்கைகளை ஒவ்வொரு திணைக்களங்களும் பகிர்ந்துகொள்ளல் மற்றும் பிரதேச, மாவட்ட, மாகாணம், தேசிய ரீதியில் பகிர்ந்து கொள்ளல் போன்றவை முன்னெடுக்க திட்டமிடப்பட்டது.
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago