2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

செயலமர்வு

Suganthini Ratnam   / 2016 ஜனவரி 13 , மு.ப. 08:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.ஹனீபா

அம்பாறை மாவட்ட ஒருங்கிணைந்த துறைசார் சுகாதார  அபிவிருத்தித் திட்;டம் தயாரிப்பதற்கான செயலமர்வு நேற்று செவ்வாய்க்கிழமை கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையில் ஐரோப்பிய ஒன்றிய அபிவிருத்தித் திட்டத்தின் அனுசரனையில் நடைபெற்றது.

ஐரோப்பிய ஒன்றிய அபிவிருத்தித் திட்டத்தினால் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் ஒருங்கிணைந்த துறைசார் அபிவிருத்தியை மேற்கொள்ளும் பொருட்டு 7 மாவட்டங்களில் மேற்படி 5 ஆண்டுத்திட்டம் தயாரிப்பதற்கான செயலமர்வுகள் இடம்பெற்று வருகின்றன.

கிழக்கு மாகாணத்தில் 3 மாவட்டங்களில் சுகாதாரத் துறையை அபிவிருத்தி செய்வதற்காக ஏனைய துறைகளின் பங்களிப்பை ஒருங்கிணைப்பதன் மூலம்  நிலைபேறான அபிவிருத்தியை மேற்கொள்ள வேண்டியிருப்பதாகவும் சிறந்த சுகாதாரத்துறையின் வளர்ச்சியை உறுதிப்படுத்தவேண்டிய அவசியம் உள்ளது. குறிப்பாக, கல்முனைப் பிராந்தியத்தில் சுகாதாரத்துறையில் துரித அபிவிருத்தியை காண்பதற்கு பல துறைகளையும் உள்ளடக்கிய ஒருங்கிணைந்த துறைசார் அபிவிருத்தித் திட்டம் மிகவும் அவசியமாக உள்ளதாகவும் இதற்கு கிராம மட்டத்திலான தரவுகளையும் தேவைகளையும் உள்வாங்கி திட்டம் தயாரிக்கப்பட வேண்டும் என கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஏ.எல்.அலாவுடீன் தெரிவித்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X