2025 மே 21, புதன்கிழமை

செயலமர்வு

Suganthini Ratnam   / 2016 மே 03 , பி.ப. 12:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பி.எம்.எம்.எ.காதர்

பல்கலைக்கழக அனுமதிக்கு விண்ணப்பிப்பது தொடர்பாக மருதமுனையில் விழிப்பூட்டும் செயலமர்வு எதிர்வரும் சனிக்கிழமை 9. மணிக்கு மருதமுனை பொது நூலகத்தில் அமைந்துள்ள பிரஜைகள் வள நிலையத்தில் நடைபெறவுள்ளது.

கல்வி மற்றும் சமூக வலுவூட்டலுக்கான ஒத்துழைப்பு மையம் நடத்தவுள்ள இந்தச் செயலமர்வில் 2015ஆம் ஆண்டு க.பொ.த. உயர்தரப் பரீpட்சையில் சித்தியடைந்து பல்கலைக்கழகத்துக்கு விண்ணப்பிக்க தகுதி பெற்ற மாணவர்கள் கலந்துகொள்ள முடியும்.

கல்வி மற்றும் சமூக வலுவூட்டலுக்கான ஒத்துழைப்பு மையத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியும் சப்ரகமுவ பல்கலைக்கழகப் பதிவாளருமான  எம்.எப்.ஹிபத்துல் கரீம் வளவாளராகக் கலந்துகொண்டு விரிவுரை நிகழ்த்தவுள்ளார்.

தற்போது நடைமுறையில் உள்ள இஸட் புள்ளி அடிப்படையில் விரும்புகின்ற பாடநெறிகளைத் தெரிவு செய்வது எப்படி என்பது பற்றி விரிவாக விளக்கமளிக்கப்படவுள்ளது.

இந்த செயலமர்வில் கலந்து கொள்ள விரும்புகின்றவர்கள் 0711463706, 0771584168 ஆகிய இலக்கங்களுக்கு குறுஞ்செய்தி மூலம் மட்டும் தங்கள் பெயர்களைப் பதிவு செய்வதுடன்,  seaseforum@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கும் உங்கள் பெயர் விவரங்களை அனுப்பி வைக்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
   

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X