Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2015 டிசெம்பர் 22 , மு.ப. 05:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
-அஸ்லம் மௌலானா
கிழக்கு மாகாண ஆளுநருக்கான செயலாளர் கடந்த 11 மாதங்களாக நியமிக்கப்படாமையினால்;, தேவைகளை பூர்த்தி செய்வதில் பொதுமக்கள் சிரமத்தை எதிர்நோக்குவதாக நல்லாட்சிக்கும் அபிவிருத்திக்குமான கிழக்கு மாகாண மன்றம் தெரிவித்தது.
இது தொடர்பில் அந்த மன்றம் இன்று செவ்வாய்க்கிழமை விடுத்துள்ள அறிக்கையில், 'கடந்த ஜனவரி மாதம் 08ஆம் திகதி ஏற்பட்ட ஆட்சி மாற்றத்துக்குப் பின்னர் புதிதாக ஆளுநர் ஒருவர் நியமிக்கப்பட்டபோதிலும், இன்னும் அவருக்கான செயலாளர் நியமிக்கப்படவில்லை.
இது இவ்வாறிருக்க, கிழக்கு மாகாண ஆளுநராக கடமையாற்றுகின்ற ஒஸ்ரின் பெர்னாண்டோ ஜனாதிபதியின் ஆலோசகராகவும் பதவி வகிப்பதால், வாரத்தில் இரு தினங்கள் மாத்திரமே ஆளுநர் செயலகத்தில் கடமைக்கு அவர் சமூகமளிக்கின்றார்.
இதன் காரணமாக கிழக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் புதன்கிழமைக்கு பதிலாக திங்கட்கிழமை பொதுமக்கள் தினமாக மாற்றப்பட்டுள்ளது. இந்த முறைமை கிழக்கு மாகாணத்தில் மாத்திரமே வழமைக்கு மாறாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதனால், ஏனைய அமைச்சுகள் மற்றும் காரியாலயங்களில் தேவைகளை நிறைவேற்றச் செல்கின்ற பொதுமக்கள் குறிப்பாக, அரசாங்க ஊழியர்கள் புதன்கிழமை அங்கு சென்று மீண்டும் மறு திங்கட்கிழமைவரை ஆளுநர் பணிக்காக காத்திருக்க வேண்டியுள்ளது' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஆளுநருக்கான செயலாளராக எவரும் கடமையில் இல்லாமையினால்; கனிஷ்டதர அதிகாரியொருவரே உதவிச் செயலாளராக பணியாற்றுகின்றனர். இதனால், நிர்வாகச் சிக்கல்கள் ஏற்படுகின்றன. இது தொடர்பில் ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டுசெல்வதற்காக மகஜர் அனுப்பத் தீர்மானித்துள்ளோம்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago