Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Suganthini Ratnam / 2016 ஜூன் 19 , மு.ப. 08:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.ஜமால்டீன்
தனியார் பஸ்ஸை வழிமறித்து அதன் சாரதியையும் நடத்துநரையும் தாக்கிய குற்றச்சாட்டின் பேரில் மேலும் ஒருவரை (வயது 19) அம்பாறை, பாலமுனைப் பிரதேசத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை செய்ததாக பொலிஸார்; தெரிவித்தனர்.
கடந்த 06ஆம் திகதி இரவு பாலமுனைப் பிரதேசத்தைச் சேர்ந்த இருவர் கல்முனைப் பிரதேசத்திலிருந்து பாலமுனைப் பிரதேசம் நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்தனர். இதேவேளை, அக்கரைப்பற்றுப் பிரதேசம் நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த தனியார் பஸ் ஒன்று காரைதீவுப் பிரதேசத்தில் குறித்த மோட்டார் சைக்கிளை முந்திச்செல்ல முற்பட்டது. இதன்போது, மோட்டார் சைக்கிளில் சென்றவர்களுக்கும் பஸ் சாரதி மற்றும் நடத்துநருக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டது. இச்சம்பவம் தொடர்பில் தங்களின் நண்பர்களுக்கு மோட்டார் சைக்கிளில் சென்றவர்கள் தெரியப்படுத்தியுள்ளனர். இந்நிலையில், குறித்த பஸ்ஸை வழிமறித்து சாரதியையும் நடத்துநரையும் சுமார் 20 பேர்; சேர்ந்து தாக்கியுள்ளனர்.
இதில் காயமடைந்த பஸ் சாரதியான ஏ.அஸ்ஹர் (வயது 37), நடத்துநரான சந்திரசேகர் தனஞ்சயன் (வயது 24) ஆகியோர் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றனர்.
இத்தாக்குதல் தொடர்பில் பொலிஸில் இவர்கள் இருவரும் செய்த முறைப்பாட்டை அடுத்து, ஏற்கெனவே 07 பேர் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றத்தில்; ஆஜர்படுத்தப்பட்டு, தலா ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியான சரீரப்பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .