2025 மே 20, செவ்வாய்க்கிழமை

சிரேஷ்ட பிரஜைகளுக்கு குடைகள் கையளிப்பு

Kogilavani   / 2016 மே 06 , மு.ப. 07:26 - 0     - {{hitsCtrl.values.hits}}


 

 

 

 

 

 

 

 

 

 

 

 

- ஏ.ஜி.ஏ.கபூர்

ஓய்வுபெற்ற சிரேஷ்ட பிரஜைகளுக்கு குடைகள் கையளிக்கும் நிகழ்வு, புதன்கிழமை(04), அம்பாறை, பட்டியடிப்பிட்டி, அல்- ரஹுமியா வித்தியாலத்தில் நடைபெற்றது.

பட்டியடிப்பிட்டி கிராம சிரேஷ்ட பிரஜைகள் குழுவின் தலைவர் ஏ.எம்.எம்.ஸஹீட்(ஜே.பி) தலைமையில், அக்கரைப்பற்று றஸ்பாஸ் வர்த்தக நிலையத்தின் அனுசரணையுடன் இடம்பெற்ற இந்நிகழ்வில், சிரேஷ்ட பிரஜைகள் குழுவைச் சேர்ந்த, 60 வயதைத் தாண்டிய 60 முதியவர்களுக்கு குடைகள் வழங்கி வைக்கப்பட்டன. 

இந்நிகழ்வில், அக்கரைப்பற்று பிரதேச செயலக சமூக சேவை அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.இ.எச்.ஸியாட் அஹமட், வித்தியாலய அதிபர் அல்-ஹாஜ் ஏ.எல்.ஸெய்னுதீன், கிராம உத்தியோகத்தர் யூ.எல்.எம்.பைஸால் ஆகியோர் கலந்துகொண்டனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X