Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Suganthini Ratnam / 2016 மே 02 , மு.ப. 05:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ரீ.கே.றஹ்மத்துல்லா,கனகராசா சரவணன்,எஸ்.ஜமால்டீன்
அம்பாறை, அக்கரைப்பற்று வட்டார வன பரிபாலனத் திணைக்கள அதிகாரி ஒருவரின் பாராபட்சமான நடவடிக்கை காரணமாக வட்டமடுப் பிரதேச விவசாயிகளை இம்முறை சிறுபோகச் செய்கையில் ஈடுபட விடாது தடை விதித்துள்ளமையைக் கண்டித்து கவனயீர்ப்புப் போராட்டம் இடம்பெற்றுள்ளது.
விவசாய அமைப்புகளினுடைய ஒன்றியத்தின் ஏற்பாட்டில் அக்கரைப்பற்று நகர் பள்ளிவாசல் முன்பாகவுள்ள பிரதான வீதியில் இன்று திங்கட்கிழமை இந்த கவனயீர்ப்புப் போராட்டம் இடம்பெற்றுள்ளது.
இந்த ஆர்ப்பாட்டத்தின்போது விவசாய அமைப்புகளினுடைய ஒன்றியத் தலைவர் தெரிவிக்கையில், 'அக்கரைப்பற்று வட்டமடு, வேப்பையடி, கொக்குழுவ, முறாணவெட்டி, வட்டமடு புதிய கண்டம் ஆகிய ஐந்து கண்டங்களிலும் சுமார் 1,585 ஏக்கரில்; கடந்த 47 வருடங்களாக தொடர்ந்து விவசாயச் செய்கையில் ஈடுபட்டு வந்துள்ளோம். 717 விவசாயக் குடும்பங்கள் விவசாயச் செய்கையில் ஈடுபட்டு ஜுவனோபாயத்தைக் கொண்டு செல்கின்றனர்' என்றார்.
'மேலும், கடந்த யுத்த சூழ்நிலையிலும் கூட விவசாயச் செய்கையில் ஈடுபட்ட தங்களுக்குச் சொந்தமான நெற்காணிகளில் விவசாயச் செய்கையில் ஈடுபடுவதற்கு தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளமை கவலை அளிக்கின்றது.
இப்பிரதேசத்தை அண்டிய ஏனைய வயற்காணிகளில் எமது சகோதர இனமான தமிழ் மற்றும் சிங்களவர்கள் விவசாயச் செய்கையில் ஈடுபடுவதற்கு எந்தவித தடையும் ஏற்படுத்தாத நிலையில், எமக்கு மட்டும் தடை விதித்துள்ளமையை பாராபட்சமாகவே பார்க்க வேண்டியுள்ளது. இந்நிலையில், வட்டமடுப் பிரதேச விவசாயிகள் கவனயீர்ப்புப் போராட்டத்தையும் சுழற்சி முறையில் உண்ணாவிரதத்தையும் மேற்கொண்டு தங்களுக்கு நியாயம் தேடுவதற்கு முனையவுள்ளனர்' எனவும் அவர் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
42 minute ago
2 hours ago
5 hours ago
5 hours ago