Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Suganthini Ratnam / 2016 ஜூன் 30 , மு.ப. 04:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம். ஹனீபா
ஆழிப்பேரலையின்போது 06 வயதில் காணாமல் போன சிறுமியின்; டீ.என்.ஏ. பரிசோதனை அறிக்கையும் சிறுமியை பெற்றோர் என்று உரிமை கோரிய இரு குடும்பங்களின் டீ.என்.ஏ. பரிசோதனை அறிக்கையும் ஒத்துப்போகாமையால் இதனை நிராகரித்த கல்முனை நீதவான் நீதிமன்ற நீதவான் ஐ.பயாஸ் றஸாக், அச்சிறுமியை சிறுவர் இல்லத்தில் ஒப்படைக்குமாறு நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டார்.
கடந்த பெப்ரவரி மாதம் கல்முனைப் பொலிஸாரால் மீட்கப்பட்ட 16 வயது நிரம்பிய இச்சிறுமியை 02 குடும்பங்கள் உரிமை கோரியதை அடுத்து சர்ச்சை ஏற்பட்டிருந்தது.
இது தொடர்பாக பொலிஸாரால் கல்முனை நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து, உரிமை கோரியிருந்த 02 குடும்பங்கள் மற்றும் குறித்த சிறுமியின் டீ.என்.ஏ. பரிசோதனை அறிக்கையை சமர்ப்பிக்குமாறு நீதிமன்றத்தால் உத்தரவிடப்பட்டிருந்தது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
58 minute ago