2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

சிறுவர்களை கூலிக்கமர்த்தி திருட்டு: பெண்ணுக்கு விளக்கமறியல்

Princiya Dixci   / 2015 டிசெம்பர் 10 , மு.ப. 03:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம். ஹனீபா

அம்பாறை, பொத்துவில் பிரதேசத்தில் 12 மற்றும் 13 வயது மதிக்கத்தக்க சிறுவர்கள் இருவரை கூலிக்கமர்த்தி வீடுகளில் திருட்டுச் சம்பவங்களில் ஈடுபடுத்திய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட பெண்ணொருவரை, எதிர்வரும் 16ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பொத்துவில் நீதவான் நீதிமன்ற நீதவான் ஐ.பி. றஸாக், நேற்று புதன்கிழமை (09) உத்தரவிட்டார்.

அண்மைக்காலமாக பொத்துவில் பிரதேச வீடுகளிலும் வர்த்தக நிலையங்களிலும் இரவு வேளையில் கூரையின் ஓட்டைக் கழற்றி திருட்டுச் சம்பவங்கள் இடம்பெற்று வந்தததாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடுகள் பதிவுசெய்யப்பட்டன. 

இதையடுத்து பொத்துவில் பொலிஸார் மேற்கொண்ட விசாரணையின் பின்னர் இரு சிறுவர்களும் குறித்த பெண்ணும், நேற்று (09) கைது செய்யப்பட்டனர்.

இவர்களை பொத்துவில் நீதவான் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போது, குறித்த பெண்ணை விளக்கமறியலில் வைக்குமாறும் இரு சிறுவர்களையும் சிறுவர் நன்னடத்தை திணைக்களத்தின் அதிகாரிகளிடம் ஒப்படைக்குமாறும் நீதவான் உத்தரவிட்டார். 

மேலதிக விசாரணைகளை பொத்துவில் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .