2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

சிறுவர் காயமடைதல் தவிர்ப்பு; 7,400 பேருக்கு விழிப்புணர்வு

Suganthini Ratnam   / 2015 டிசெம்பர் 21 , மு.ப. 06:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

சிறுவர் காயமடைதல் தவிர்ப்பு சம்பந்தமாக அம்பாறை மாவட்டத்தில் 7,400 பேருக்கு இந்த வருடம் விழிப்புணர்வூட்டப்பட்டுள்ளதாக கல்முனை சர்வோதய இணைப்பாளர் எம்.எல்.எம்.பாரிஸ், இன்று திங்கட்கிழமை தெரிவித்தார்.

ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் அனுசரணையுடன் முன்னெடுக்கப்படும் 'சிறுவர் காயமடைதல் தவிர்ப்பு' திட்டத்தின் கீழ் அம்பாறை மாவட்டத்தின் 06 பிரதேச செயலகப் பிரிவுகளிலும் சிறுவர் காயமடைதல் தவிர்ப்பு சம்பந்தமான விழிப்புணர்வுத் திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.  

சிறுவர்கள் விபத்துகளில் சிக்கி உயிரிழப்பதையும் அங்கவீனமடைவதையும் தவிர்ப்பதற்காக 'வருமுன் காப்போம்' என்பதற்கமைய விழிப்புணர்வு சமூகத்தின் சகல தரப்பினருக்கும் வழங்கப்படுகின்றது. இதன்படி, 18 வயதுக்குட்பட்ட 5,650 மாணவர்களுக்கும் 1,350 பொதுமக்களுக்கும் அரச அதிகாரிகள் 350 பேருக்கும்; வீதிப் போக்குவரத்துப் பொலிஸார் 50 பேருக்கும் விழிப்புணர்வூட்டப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டத்தில் செயற்றிட்டப் பிரதேச செயலகப் பிரிவுகளான சம்மாந்துறை, இறக்காமம், உஹனை, மஹாஓயா, பதியத்தலாவ மற்றும் நாவிதன்வெளியில் விழிப்புணர்வூட்டல் முன்னெடுக்கப்படுகின்றது.

இதனைத் தவிர, இவ்வருடம் பல்வேறு விபத்துகளில் சிக்கி பாரதூரமாகக் காயமடைந்த 15 சிறுவர்களுக்கு புனர்வாழ்வளிப்பதற்காக தலா 20 ஆயிரம் ரூபாய் படி  வழங்கப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X