2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பாக 127 முறைப்பாடுகள்

Suganthini Ratnam   / 2016 செப்டெம்பர் 06 , மு.ப. 07:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.றஹ்மத்துல்லா

கடந்த வருடத்தில் சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பாக அம்பாறை மாவட்டத்தில் 127 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக அம்மாவட்ட சிறுவர் பாதுகாப்பு உத்தியோகஸ்தர் ஏ.எம்.அஸாறுதீன் தெரிவித்தார்.

சிறுவர் பாதுகாப்பு, சிறுவர் உரிமை தொடர்பான விழிப்புணர்வுக் கருத்தரங்கு, அட்டளைச்சேனை கிழக்கிலங்கை அரபுக் கல்லூரியில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றபோதே, அவர் இதனைக் கூறினார்.

இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், '16 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு கல்வி கற்பதற்கான வசதிகளை ஏற்படுத்திக்கொடுப்பது கட்டாயமாகும். அத்துடன், அவர்களை தொழிலுக்கு அமர்த்துதல், துன்;புறுத்துதல் குற்றமாகும்.
சிறுவர்கள் தொழிலில் அமர்த்தப்பட்டுள்ளமை தொடர்பில் தெரிந்திருந்தும், அதைத் தெரியப்படுத்தாமலிருப்பதும்; தண்டனைக்குரிய குற்றமாகும்' என்றார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X