Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2015 டிசெம்பர் 07 , மு.ப. 04:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.கார்த்திகேசு
சிறுவர்கள் என்பவர்கள் உடல், உள, அறிவு ரீதியாக பாதுகாக்கப்பட வேண்டியவர்கள். நாட்டின் ஆட்சியாளர்கள் உட்பட நாம் அனைவரும் இவர்களைப் பாதுகாத்து, நாளைய உலகின் வெற்றியாளர்களாக மாற்ற வேண்டுமென அட்டாளைச்சேனைப் பிரதேச செயலகத்தின் உதவிப் பிரதேச செயலாளர் டி.ஜே.அதிசயராஜ் தெரிவித்தார்.
அம்பாறை, திருக்கோவில் மெதடிஸ்த மிஷன் சில்வவெஸ்ட் முன்பள்ளி மாணவர்களின் ஒளிவிழா, அருட்திரு எஸ்.டபிள்யு தேவகுமாரன் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை (06) மாலை நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,
சிறுவர்களின் பாதுகாப்புக்கு அரசாங்கத்தினால் பல்வேறு நடைமுறைகள் இருக்கின்ற போதிலும் தினமும் சிறுவர்கள் நாட்டில் எங்கே ஒரு பிரதேசத்தில் துஷ்பிரயோகங்கள் மற்றும் வன்முறைகளுக்கு முகங்கொடுக்கின்றனர்.
இது அறிவார்ந்த மனித சமூகத்தில் இடம்பெறுவது என்பது சகிக்க முடியாக கசப்பான சம்பவங்களாக இருக்கின்றன. இதனை தடுக்க வேண்டிய சில தரப்பினர், கண்டும் காணாது பாராமுகமாக செயற்படுவது கவலையளிக்கின்றது.
இதனைத் தடுக்க வேண்டும். சிறுவர்கள் பாதுகாக்கப்பட வேண்டும். இதற்காக அரசாங்கத்தை மட்டும் நம்பியிருக்காது, ஒவ்வொரு பெற்றோர்களும் சமூகமும் மிகவும் அக்கறையுடன் செயற்பட வேண்டும்.
இதேவேளை, நல்லாட்சி அரசாங்கத்தினால் சிறுவர்களின் பாதுகாப்பில் ஒரு விசேட திட்டங்களை நடைமுறைப்படுத்துவதுடன், சிறுவர் துஷ்பிரயோகங்களில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக சட்டத்தின் மூலம் கடுமையான தண்டனைகளை வழங்குவதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ள வேண்டுமென அவர் மேலும் தெரிவித்தார்.
50 minute ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
50 minute ago
3 hours ago
3 hours ago