2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

சோலை வரி அறவீட்டாளர்களுக்கு அடையாள அட்டை

Suganthini Ratnam   / 2016 ஜூலை 05 , மு.ப. 04:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

-அஸ்லம் எஸ்.மௌலானா

கல்முனை மாநகர சபைக்கு உட்பட்ட பகுதிகளில் பதில் கடமை அடிப்படையில் சோலை வரி அறவீட்டு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள 08 பேருக்கு விசேட அடையாள அட்டைகள் மாநகர சபையின் ஏற்பாட்டில்  திங்கட்கிழமை (04) மாலை வழங்கப்பட்டன.

இவர்களுக்கான அடையாள அட்டைகளை  மாநகர சபை ஆணையாளர் ஜே.லியாகத் அலியும் கணக்காளர் ஏ.எச்.தஸ்தீக்கும் வழங்கிவைத்தனர்.

மாநகர சபை ஊழியர்களின் வினைத்திறன் மற்றும் வருமான சேகரிப்பை அதிகரிக்கச் செய்யும் வகையில் ஆரம்பிக்கப்பட்டுள்ள பல்வேறு வேலைத்திட்டங்களுள் இந்த அடையாள அட்டைகள் வழங்கும் நடவடிக்கையும் உள்ளடக்கமாகும்.

வீடு, வீடாகச் சென்று சோலை வரி அறவீட்டில் ஈடுபட்டுள்ள இந்த ஊழியர்கள் மாநகர சபையின் வரி அறவீட்டாளர்கள் என்பதை பொதுமக்கள் அறிந்துகொள்வதற்காக இந்த அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.

மேலும், தகவல்கள் ஏதும் அறிய வேண்டுமாயின், இந்த ஊழியர்களின்; அடையாள அட்டைகளில்  குறிப்பிடப்பட்டுள்ள தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்புகொள்ள முடியும் என கணக்காளர் ஏ.எச்.தஸ்தீக் தெரிவித்தார்.

இந்த ஊழியர்களுக்கு விரைவில் சீருடை வழங்குவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது எனவும் அவர் கூறினார்.

1994ஆம் ஆண்டு முதல் இதுவரையான காலப்பகுதியில் கல்முனை மாநகர சபைக்கு பொதுமக்கள் செலுத்த வேண்டிய சோலை வரி சுமார் 09 கோடி ரூபாய் நிலுவையாக இருந்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X