2025 ஒக்டோபர் 02, வியாழக்கிழமை

சைவசமயப் பரீட்சைக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன

Suganthini Ratnam   / 2015 செப்டெம்பர் 18 , மு.ப. 05:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வி.சுகிர்தகுமார்

அம்பாரை மாவட்டத்தில் ஆலையடிவேம்பு பிரதேச இந்துமா மன்றத்தினால் நடத்தப்படவுள்ள சைவசமயப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

விண்ணப்பதாரிகள் தங்களின் விண்ணப்பங்களை  ஒக்டோபர் மாதம் 07ஆம் திகதிக்கு முன்னர் பாடசாலை அதிபர்களினூடாக  அனுப்பி வைக்க  வேண்டும் என பரீட்சைக் குழுத் தவைலவரும் இந்துமாமன்ற இணைப்பாளருமான ம.காளிதாசன் கேட்டுக்கொண்டார்.

3ஆம் ஆண்டு முதல் க.பொ.த. சாதாரணதரம்வரையான வகுப்பு மாணவர்களுக்கு நடத்தப்படும் இப்பரீட்சையில் சித்தியடையும் மாணவர்களை கௌரவித்து சான்றிதழ்களும் பரிசுகளும் வழங்கிவைக்கப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.

இப்பரீட்சையானது வலய கல்வி அதிகாரிகளின் அனுமதியுடனும்; அங்கிகாரத்துடனும் நடத்தப்படுவதால் வழங்கப்படும் சான்றிதழ்கள்; சட்ட ரீதியானதாகவும் வலுவுள்ளதாகவும் அமையும் என தெரிவித்த மன்றத்தின் தலைவர் வே.சந்திரசேகரம், தவறாது பரீட்சைக்கு விண்ணப்பிக்குமாறும் மாணவர்களை  கேட்டுக் கொண்டார்.

அகில இலங்கை இந்துமாமன்றத்தின் அனுசரணையோடு ஆலையடிவேம்பு பிரதேச இந்துமாமன்றம் 13ஆவது வருடமாக நடாத்துகின்ற இப்பரீட்சையானது நவம்பர் மாதம் 07ஆம் திகதி நடைபெறவுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X