Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 21, புதன்கிழமை
Gavitha / 2016 மார்ச் 12 , மு.ப. 06:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
பைஷல் இஸ்மாயில்
ஜோர்தான் - இலங்கை நாடாளுமன்ற நட்புறவு சங்கத்தின் தலைவராக விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சரின் ஊடக இணைப்பாளர் எம்.றியாத் நேற்று வெள்ளிக்கிழமை (11) தெரிவித்தார்.
ஜோர்தான் - இலங்கை நாடாளுமன்ற நட்புறவு சங்கத்தின் கூட்டம் கடந்த புதன்கிழமை (09) புதன்கிழமை நாடாளுமன்ற கட்டடத்தொகுதியில், சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபால உள்ளிட்ட அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இதில் ஜோர்தான் - இலங்கை நாடாளுமன்ற நட்புறவு சங்கத்தின் தலைவராக விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டார்.
இதன் பிரதித் தலைவர்களாக நாடாளுமன்ற உறுப்பினர்களான அலிசாஹிர் மௌலானா, சுரேஷ் வடிவேல், எம்.எச்.நபவி ஆகியாரும் பொதுச் செயலாளராக நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பிரமான, பொருளாளராக நாடாளுமன்ற உறுப்பினர் எட்வட் குணசேகர உள்ளிட்ட 15 பேர் கொண்ட நிறைவேற்றுக் குழுவும் தெரிவு செய்யப்பட்டதாகவும் அவர் மேலும் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .