Princiya Dixci / 2021 ஜூன் 28 , பி.ப. 08:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.ஏ.றமீஸ், எஸ்.எம். இர்ஷாத்
தேசிய டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்துக்கு அமைவாக, அக்கரைப்பற்று சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தின் எல்லைக்குட்பட்பட்ட பிரதேசங்களில் டெங்கு ஒழிப்பு வேலைத் திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
அக்கரைப்பற்று பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் எப்.எம்.ஏ காதர் தலைமையிலான் இவ்டெங்கு ஒழிப்பு வேலைத் திட்டத்தில், பொதுச் சுகாதார பரிசோதகர்கள், சுகாதார பூச்சியியல் உத்தியோகத்தர்கள், சிவில் சமூகத்தினர் இணைந்துள்ளனர்.
அக்கரைப்பற்று பிரதேசத்தில் உள்ள அனைத்து கிராம சேவகர் பிரிவுகளிலும் இவ் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் நடைமுறைப் படுத்தப்பட்டு வருகின்றன.
இப்பிரதேசங்களில் உள்ள வீடுகள், வெற்றுக் காணிகள், மத ஸ்தலங்கள், வர்த்தக நிலையங்கள், அதன் சுற்றுப்புறச் சூழல்கள் போன்றன அவதானிக்கப்பட்டு, டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதுடன், டெங்கு நுளம்பு பரவக் கூடிய ஏதுவான இடங்களை கொண்டிருந்தவர்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டதுடன், அவர்களுக்கு அறிவுறுத்தல்களும் ஆலோசனைகளும் வழங்கப்பட்டன.
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago