Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 21, புதன்கிழமை
Princiya Dixci / 2016 மார்ச் 25 , மு.ப. 04:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
- ரீ.கே.றஹ்மத்துல்லா
டெங்கு நோயினால் இவ்வருடம் ஜனவரி மாதம் மாத்திரம் நாட்டில் 28 பேர் பலியாகி உள்ளனர். மேலும், 2,283 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என அட்டாளைச்சேனை பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி ஏ.எல். அலாவுதீன் தெரிவித்தார்.
தேசிய டெங்கு கட்டுப்பாட்டு வாரத்தை முன்னிட்டு அட்டாளைச்சேனை பிரதேச கள உத்தியோகத்தர்கள், பொதுச் சுகாதார பரிசோதகர்கள் மற்றும் பள்ளி வாயல்கள், பிரதேச சபை ஆகியவற்றின் முக்கியஸ்தர்களுடனான கலந்துரையாடல், அட்டாளைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் நேற்று (24) நடைபெற்ற போது இவ்வாறு கூறினார்.
இங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
டெங்கு எனும் வைரஸ் வந்ததன் பின்னர் செயற்படாது வருமுன் காப்பதே சாலச்சிறந்ததாகும். அதற்காக டெங்கு தொடர்பான விழிப்புணர்வும், அதிலிருந்து பாதுகாப்புப் பெறும் வழிமுறைகள் பற்றியும் எதிர்வரும் 29ஆம் திகதி முதல் ஏப்ரல் மாதம் 04ஆம் திகதி வரை ஒரு வார கால தேசிய டெங்கு கட்டுப்பாட்டு வாரம் அமுல்படுத்தப்படவுள்ளது என்றார்.
கடந்த வருடங்களுடன் ஒப்பிடுகையில் 2015 மற்றும் 2016 ஆண்டுகளில் டெங்கின் பாதிப்பு குறைக்கப்பட்டுள்ளது.
அட்டாளைச்சேனை பிரதேசத்தில் கடந்த வருடம் 46 பேர் டெங்கினால் பாதிக்கபட்டனர். இவ்வருடம் 10 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளனர்.
இலங்கையில் கொழும்பு மற்றும் யாழ்ப்பாணம் போன்ற பகுதிகளிலேயே அதிகமான டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். அம்பாறை மாவட்டத்தில் மருதமுனை மற்றும் சாய்ந்தமருது போன்ற பிரதேசங்களில் டெங்கின் தாக்கம் அதிகமுள்ளதாகப் பதிவாகியுள்ளது.
அரசாங்கத்தின் திட்டத்துக்கமைய மேற்கொள்ளப்பட்டு வரும் டெங்கு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மக்களிடத்தில் வெற்றிகரமாக தாக்கம் செலுத்தியுள்ளது. இதற்கு ஊடகத்துறையின் பங்களிப்பு மிகப் பிரதானமாக அமைந்துள்ளது.
அரசாங்கத்தின் திட்டத்துக்கமைய ஒவ்வொரு கிராம சேவகர் பிரிவிலும் ஒவ்வொரு டெங்கு கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டு டெங்கு தொடர்பான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.
இதற்காக பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை மாத்திரம் அல்லாது பிரதேச சபை, பள்ளிவாயல்கள், பாடசாலைகள், பிரதேச செயலகம் மற்றும் அரச சார்பற்றி நிறுவனங்கள், விளையாட்டுக் கழகங்கள் போன்றன ஒற்றிணைந்து செயற்படும் போது டெங்கினை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரமுடியும் என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
57 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago