2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

தகவல் வழங்காவிடின் கடும் சட்ட நடவடிக்கை

Princiya Dixci   / 2021 ஜூன் 01 , பி.ப. 12:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.ஹனீபா

அத்தியாவசியத் தேவைகளுக்காக வெளி மாவட்டங்களிலிருந்து கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளுக்கு வருபவர்கள் கட்டாயம் பிரதேசத்திலுள்ள சுகாதார வைத்தியதிகாரி அலுவலகத்துக்கு தெரியப்படுத்த வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

பயணக் கட்டுப்பாடு அமுலிலுள்ளமையால், இவ்வாறான தகவல் வழங்காதவர்களுக்கு எதிராக தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ், கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென, கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஜீ. சுகுணன் தெரிவித்தார்.

சுகாதார வைத்தியதிகாரி அலுவலகத்துக்கு அறிவிக்க முடியாதவர்கள், சம்மந்தப்பட்ட கிராம சேவகர் ஊடாக பொதுச் சுகாதார பரிசோதகர்களுக்கு தகவல்களை வழங்குமாறும் அவர் கேட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .