ஏ.எச்.ஏ. ஹுஸைன் / 2019 ஓகஸ்ட் 14 , பி.ப. 03:22 - 0 - {{hitsCtrl.values.hits}}

கல்முனை, பாண்டிருப்பில் பெண்ணொருவரிடமிருந்து பட்டப்பகலில் இரண்டு தங்கச் சங்கிலிகளை, மோட்டார் சைக்கிளில் வந்து கொள்ளையிட்டுச் சென்ற இருவரை, கல்முனைப் பொலிஸார், இன்று(14) கைது செய்தனர்.
தனது வீட்டுக்கு முன்னால் நின்று கொண்டிருந்த பெண்ணிடம் இரண்டு தங்கச் சங்கிலிகளை மோட்டார் சைக்கிளில் வந்த இருவர், நேற்றுக் காலை 11 மணியளிவில் கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.
தகவலறிந்து விரைந்து செயற்பட்டு அங்கு வந்த பொலிஸார், விசாரணைகளை மேற்கொண்டதுடன், அங்கு வர்த்தக நிலையமொன்றில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி கமெராக்கள் ஊடாக கொள்ளையர்கள் வந்த மோட்டார் சைக்கிள் அடையாளம் காணப்பட்டது.
அதன் பின்னர் சம்பந்தப்பட்டவர்களை வாழைச்சேனை ஓட்மாவடியில் வைத்து பொலிஸார் கைது செய்து, கல்முனை பொலிஸ் நிலையத்துக்குக் கொண்டு வரப்பட்டு விசாரணைகளை மேற்கொண்டதுடன், கொள்ளையடிக்கப்பட்ட தங்கச் சங்கிலிகளையும் கொள்ளையிட பயன்படுத்திய மோட்டார் சைக்கிளையும் கைப்பற்றியுள்ளனர்.
21 minute ago
55 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
55 minute ago
1 hours ago
1 hours ago