Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Niroshini / 2016 ஏப்ரல் 05 , மு.ப. 09:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.எல். அப்துல் அஸீஸ்
கிழக்கு மாகாண போக்குவரத்து அதிகார சபையின் அம்பாறையில் அமைந்துள்ள மாவட்ட காரியாலயத்தினால், அம்பாறை மாவட்ட கரையோர தனியார் பஸ் உரிமையாளர்களிடம் காட்டப்பட்ட கெடுபிடிகள் மற்றும் தீவிரப்போக்குடைய செயற்பாடுகள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கே.எம்.அப்துல் றஸாக்கினால் தீர்த்து வைக்கப்பட்டுள்ளது.
அண்மைக்காலமாக அம்பாறை மாவட்டத்தின் கரையோர பிரதேசங்களை மையப்படுத்தி போக்குவரத்துப்பணிபுரியும் தனியார் பஸ் உரிமையாளர்களிடம் அம்பாறையில் உள்ள கிழக்கு மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் மாவட்ட காரியாலயமானது, அங்கு கடமைநிமித்தம் செல்லும் தனியார் பஸ் உரிமையாளர்களின் காரியங்களை செயற்படுத்துவதில் கெடுபிடிகள் மற்றும் தீவிரப்போக்குடைய தன்மைகளை வெளிப்படுத்தியதனால் பாதிக்கப்பட்ட நாங்கள் இவ்விடயத்தை கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கே.எம்.அப்துல் றஸாக்கின் கவனத்துக்கு கொண்டுவந்ததாக கல்முனை பிராந்திய தனியார் பஸ் லிமிடட் கூட்டமைப்பின் தலைவர் எ.அரூஸ் தெரிவித்தார்.
மேலும், இவ்விடயம் தொடர்பாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கே.எம்.அப்துல் றஸாக் கிழக்கு மாகாண முதலமைச்சரின் கவனத்துக்கு கொண்டுவந்து போக்குவரத்து அதிகாரசபையின் அம்பாறை மாவட்ட காரியாலயத்துக்கு புதிய மாவட்ட முகாமையாளர் ஒருவரை நியமனம் செய்ய நடவடிக்கை எடுத்ததன் மூலம் எங்களது பிரச்சினைகள் தீர்த்து வைக்கப்பட்டுள்ளதுடன், இந்த செயற்பாடு அம்பாறை மாவட்டத்தின் கரையோர பிரதேச வீதிப் பயணிகள் போக்குவரத்தை சிறப்பாக செயற்படுத்த உதவியுள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.
2 hours ago
4 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
8 hours ago