Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Suganthini Ratnam / 2016 மே 22 , மு.ப. 04:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.கார்த்திகேசு
கடந்த வாரம் பெய்த அடை மழை காரணமாக அம்பாறை, தம்பிலுவில் விவசாயப் போதனாசிரியர் பிரிவில் மூன்று ஏக்கர் நெற்செய்கையும் சுமார் 20 ஏக்கர் உப உணவுச் செய்கையும் பாதிக்கப்பட்டுள்ளதாக அப்பிரிவு விவசாயப் போதனாசிரியை திருமதி தர்சினி ரவிச்சந்திரன் தெரிவித்தார்.
கோரைக்களப்பு கண்டத்தில் மூன்று ஏக்கர் நெற்செய்கை பாதிக்கப்பட்டுள்ளது. விநாயகபுரம், பாலக்குடா, சின்னத்தோட்டம், திருக்கோவில் மற்றும் தாழ்நிலப் பிரதேசங்களில் உப உணவுச் செய்கை பாதிக்கப்பட்டுள்ளது. மழையால் ஏற்பட்ட திடீர் வெள்ளம் காரணமாக இவை நீரில் மூழ்கிப் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் கூறினர்.
இந்த இடங்களுக்குச் சென்று தம்பிலுவில் விவசாயப் போதனாசிரியை பார்வையிட்டுள்ளார்.
பாலக்குடா, விநாயகபுரம் பகுதிகளில் சுமார் நான்கு ஏக்கர் நிலக்கடலையும் சுமார் ஐந்து ஏக்கர் பயிற்றைச் செய்கையும் பாதிக்கப்பட்டுள்ளன. சின்னத்தோட்டம் மற்றும் ஏனைய கிராமங்களில் கத்தரி, மிளகாய், பயிற்றை, வெண்டி, பாசிப்பயறு, பப்பாசி, நிலக்கடலைச் செய்கை சுமார் 10 ஏக்கர் வரையிலும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
இந்த வெள்ள அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டுள்ள 35 க்கும் மேற்பட்ட விவசாயக் குடும்பங்களுக்கு மானிய அடிப்படையிலான உதவிகள் கிடைக்கும்போது, முன்னுரிமை அடிப்படையில் அவற்றை வழங்கி அவர்களை மேம்படுத்த முடியும். இதேவேளை, வேளாண்மைப் பயிருக்கு விவசாயக் காப்புறுதி செய்திருப்பின், அதற்கான நட்டஈட்டைப் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அவர் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
12 minute ago
15 minute ago
22 minute ago