2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

தரம் -10 ஐ ஆரம்பிக்கக் கோரி ஆர்ப்பாட்டம்

Suganthini Ratnam   / 2016 ஜனவரி 04 , மு.ப. 04:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.ஹனீபா

அக்கரைப்பற்று வலயக் கல்வி அலுவலகத்துக்குட்பட்ட  சின்னப்பாலமுனை அல்- ஹிக்மா வித்தியாலயத்தில் தரம் -10ஐ ஆரம்பிக்குமாறு கோரி அவ்வித்தியாலயத்துக்கு முன்பாக இன்று திங்கட்கிழமை பெற்றோர்கள் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தங்களின் கோரிக்கைகள் அடங்கிய மகஜரை அவ்வித்தியாலய அதிபரிடம் பெற்றோர்கள் கையளித்ததுடன், மாகாணக் கல்விப் பணிப்பாளர் மற்றும் வலயக் கல்விப் பணிப்பாளருக்கும் இதன் பிரதிகள் அனுப்பியுள்ளதாக பெற்றோர்கள் தெரிவித்தனர்.

அல்- ஹிக்மா வித்தியாலயத்தில் தரம் -09 வரையே வகுப்புகள் காணப்படுகின்றன. இவ்வித்தியாலயத்தில் தரம் -10 க்கு சித்தி பெறும் மாணவர்கள், கல்வியைத் தொடர்வதற்காக சுமார் 02 கிலோமீற்றருக்கு அப்பாலுள்ள பாலமுனை மற்றும் அட்டாளைச்சேனை பாடசாலைகளுக்குச் செல்ல வேண்டியுள்ளதாக பெற்றோர்கள் தெரிவித்தனர்.

இவ்வித்தியாலயத்தில் தரம் -10ஐ ஆரம்பிக்குமாறு நீண்டகாலமாக கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தும், அரசியல்வாதிகளோ மற்றும் கல்வி அதிகாரிகளோள கவனத்திற்கொள்ளாது பாரமுகமாக உள்ளதாகவும் பெற்றோர்கள் கூறினர்.  

'பாடசாலையை தரமுயர்த்து', 'தரம் -10ஐ ஆரம்பி', 'ஏழைகளின் கல்விக்கு கருணை காட்டு', 'வலயக் கல்விப் பணிப்பாளரே கவனத்தில் எடு', 'மாணவர்களின் விடுகைப் பத்திரத்தை பெற மாட்டோம்', 'அரசியல்வாதிகளே எம் பிள்ளைகளின் கல்வியின் மீது கருணை காட்டு' போன்ற சுலோபங்களை ஏந்தியவண்ணம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X