Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 05, திங்கட்கிழமை
அஸ்லம் எஸ்.மௌலானா / 2019 பெப்ரவரி 05 , பி.ப. 02:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஒரே மொழியைப் பேசுகின்ற தமிழ், முஸ்லிம் சமூகத்தினரிடையே பிரச்சினை வருகிறதென்றால், அது திட்டமிட்டே உருவாக்கப்படுகிறது என்பதை எல்லோரும் உணர்ந்துகொள்ள வேண்டுமென, கல்முனை மாநகர மேயர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தெரிவித்தார்.
இன்றைய சூழ்நிலையில், கல்வி ஒன்றேதான் சமூக மாற்றத்துக்கான ஆயுதமாகுமென்றும் அதன்மூலமே தாய் நாட்டுக்கும் சமூகத்துக்கும் எம்மால் பங்காற்ற முடியுமென்றும் அவர் தெரிவித்தார்.
எக்ஸலன்ஸ் சர்வதேச பாடசாலையின் கல்முனை கிளைக் கல்லூரி திறப்பு விழா அதன் முகாமைத்துவப் பணிப்பாளர் ஏ.ஆர்.எம்.ஜுபிர் தலைமையில், இன்று (05) நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றிய மேயர், நாட்டில் இனங்களிடையே சௌஜன்யம், புரிந்துணர்வு இருக்கின்றதென்றால், பொய்யான கருத்தாகுமெனவும் முகத்துக்கு நேராகச் சிரித்துப் பேசினாலும் முகத்துக்குப் பின்னால் விரோதமாக நடக்கின்றனர் எனவும் அடுத்தடுத்த சந்ததியினரும் அவ்வாறே உணர்வூட்டப்படுகின்றனர் எனவும் தெரிவித்தார்.
மொழிப் பிரச்சினையில் தொடங்கிய சிங்கள, தமிழ் முரண்பாடு ஆயுதப்போர் வரை சென்றதாகவும் ஆனால் தமிழ், முஸ்லிம் சமூகத்தினரிடையே பிரச்சினை திட்டமிட்டே உருவாக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
எமது அடுத்த சந்ததியினராவது பரஸ்பரம் புரிந்துணர்வுடன் ஐக்கியமாக வாழக்கூடிய சூழ்நிலையை உருவாக்கி, ஒழுக்கமும் சகிப்புத்தன்மையும் நிறைந்த சமூகத்தைக் கட்டியெழுப்ப வேண்டுமென்றும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
54 minute ago
2 hours ago
4 hours ago