Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை
Princiya Dixci / 2021 ஜூன் 15 , மு.ப. 10:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.கார்த்திகேசு, வி.ரி.சகாதேவராஜா
அம்பாறை, திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவில் பயணக் கட்டுப்பாட்டு விதிமுறைகளை இறுக்கமாக நடைமுறைப்படுத்தும் நோக்கில், வீதி சோதனைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
இவ்வீதி சோதனைகள், திருக்கோவில் பிரதேச செயலாளர் ரீ.கஜேந்திரன் மற்றும் திருக்கோவில் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சீஜ.பி.திலகரெத்தின ஆகியோரின் ஆலோசனைக்கு அமைய, நேற்றிலிருந்து (14) இடம்பெறுகின்றன.
இதன்போது, பிரதான வீதிகளில் பயணம் செய்த வானங்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோரது பயண அனுமதிப் பத்திரங்கள் பரிசோதிக்கப்பட்டன. அத்துடன், முகக்கவசங்கள் முறையாக அணியாத நபர்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு, எச்சரிக்கை செய்து அனுப்பி வைக்கப்பட்டனர்.
திருக்கோவில் பிரதேசத்தில் தொடர்ந்தம் வீதிகளில் தேவையற்ற முறையில் நடமாடுபவர்கள், முறையாக பயண அனுமதிகள் பெற்றுக் கொள்ளாத நபர்கள் மீது எதிர்வரும் நாட்டகளில் பொலிஸாரின் ஊடாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென, திருக்கோவில் பிரதேச செயலாளர் ரீ.கஜேந்திரன் தெரிவித்தார்.
இந்தச் சோதனை நடவடிக்கையில், திருக்கோவில் பிரதேச செயலக கொவிட் 19 கட்டுப்பாட்டு செயலணிக் குழு உத்தியோகத்தர்களும் பங்குபற்றினர்.
இந்நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் திருக்கோவில் பிரதேச செயலாளர் மேலும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
25 minute ago
51 minute ago
1 hours ago