Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 02, வெள்ளிக்கிழமை
Editorial / 2018 மார்ச் 21 , பி.ப. 02:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
சம்மாந்துறை வலய பாடசாலை மாணவர்களுக்கிடையே நடத்தப்படும் “திறனொளியின் திறமைக்கான தேடல் விருது” போட்டிகளில் பங்குபற்றும் மாணவர்களுக்கான கலை, இலக்கியம் தொடர்பான பயிற்சிப் பட்டறையும் அறிமுக நிகழ்வும், கமு/சது/தாறுஸ்ஸலாம் மகா வித்தியாலய கேட்போர் கூடத்தில் அண்மையில் நடைபெற்றது.
திறனொளி கலை, கலாசார ஊடக வலையமைப்பின் இணைய வானொலி ஆஸாத் எப்.எம் இன் ஓராண்டு நிறைவையொட்டி, இந்த விருதுப் போட்டி நடத்தப்படுகின்றது.
அமைப்பின் தலைவர் அறிவிப்பாளர் ஏ.ஸி.நௌஷாத்தின் நெறிப்படுத்தலுடன், அமைப்பின் நிர்வாக உறுப்பினரும் மாவட்ட ஆயர்வேத வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகருமான டொக்டர் எம்.சி.எம்.காலித்தின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், ஆஸாத் எப்.எம் இணைய வானொலியின் ஸ்தாபகரும் அமைப்பின் போஷகருமான அல்-ஹாஜ் ஏ.எல்.எம்.ஹபூல் ஆஸாத் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.
தொலைக்காட்சி, வானொலி அறிவிப்பாளர், துறை சார்ந்த மூத்த இலக்கியவாதிகள், கலைஞர்கள், கல்விமான்கள் எனப் பலர், வளவாளர்களாகக் கலந்துகொண்டு, மாணவர்களுக்கு விரிவுரைகளை நடத்தியிருந்தனர்.
இதில் கலந்துகொண்ட மாணவர்களுக்கான போட்டிகள், எதிர்வரும் 30ஆம் திகதியும் ஏப்ரல் மாதம் 7ஆம், 8ஆம் திகதிகளிலும் நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
3 hours ago
5 hours ago