Freelancer / 2021 ஜூன் 15 , மு.ப. 11:31 - 0 - {{hitsCtrl.values.hits}}

வி.ரி.சகாதேவராஜா
அம்பாறை மாவட்டத்தின் காரைதீவு, தம்பிலுவில் உள்ள தேசிய பாடசாலைகளில், அரசாங்க சேவை ஆணைக்குழுவின் கல்விச் சேவை குழுவின் செயலாளரின் கடிதத்தின் பிரகாரம் அதிபர்கள் கடமையேற்றார்கள்.
மேலும் காரைதீவு விபுலாநந்த மத்திய கல்லூரி தேசிய பாடசாலையின் அதிபராக, மயில்வாகனம் சுந்தரராஜன் கடமையேற்றார்.
அதேவேளை தம்பிலுவில் மத்திய மகா வித்தியாலயத்தின் (தேசிய பாடசாலை ) 15 ஆவது புதிய அதிபராக, பாலசுந்தரம் சந்திரேஸ்வரன் தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.
இந் நிகழ்வுகள், கல்முனை வலயக்கல்விப் பணிப்பாளர், எஸ்.புவனேந்திரன் மற்றும் திருக்கோவில் வலயக் கல்விப் பணிப்பாளர், வை.ஜெயச்சந்திரனின் முன்னிலையில் கொவிட்- 19 சுகாதார விதிமுறைகளுக்கு அமைவாக இடம்பெற்றன. நிகழ்வில் முன்னாள் அதிபர்களும் கலந்து கொண்டனர்.
காரைதீவு விபுலாநந்தா மத்திய கல்லூரி அதிபராக இருந்த, பாலசுந்தரம் சந்திரேஸ்வரன் 03 06 2021 ஆம் திகதியில் இருந்து, தம்பிலுவில் மத்திய மகா வித்தியாலயத்தின் (தேசிய பாடசாலை) புதிய அதிபராக நியமிக்கப்பட்டுள்ளதுடன், அவரது இடத்திற்கு பிரதி அதிபராக இருந்த ம.சுந்தரராஜன் பதில் அதிபராக நியமிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
M
11 minute ago
27 minute ago
30 minute ago
50 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
27 minute ago
30 minute ago
50 minute ago