Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 15, வியாழக்கிழமை
Editorial / 2020 ஜூலை 07 , பி.ப. 05:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
நூருல் ஹுதா உமர்
2020 பொதுத் தேர்தலில் போட்டியிடும் முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் பலரும் அம்பாறை மாவட்டத்தில் பொதுமக்களில் வீடுகளுக்கே சென்று தேர்தல் பிரசார பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.
அதன் அடிப்படையில், தேசிய காங்கிரஸ் சார்பான திகாமடுல்ல தேர்தல் மாவட்ட வேட்பாளர் ஏ.எல்.எம்.சலீம், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன வேட்பாளர் ரிஸ்லி முஸ்தபா போன்றோர்களின் “வீட்டுக்கு வீடு தேர்தல் பிரசார பணி” கடந்த சில நாள்களாக மாளிகைக்காடு சாய்ந்தமருது பிரதேசங்களில் நடைபெற்று வருகிறது.
அத்துடன், தேசிய காங்கிரஸ் சார்பான திகாமடுல்ல தேர்தல் மாவட்ட வேட்பாளர்களான றிசாத் ஷரிஃப், சட்டத்தரணி ஏ.எல்.எம்.றிபாஸ், சட்டத்தரணி கே.எல்.சமீம், ஐக்கிய மக்கள் சக்தி வேட்பாளர்களான ஏ.எல்.எம்.நஸீர், எம்.சி.பைசல் காசிம், ஏ.எல்.எம். தவம், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் வேட்பாளர் முஷாரப், கே.எம். ஜவாத் போன்றோர்களும் வீட்டுக்கு வீடு தேர்தல் பிரசார பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.
சகல அரசியல் கட்சிகளும் மகளிர் கருத்தரங்கு, இளைஞர் கூட்டங்கள், பொதுக்கூட்டங்கள், அரசியல் செயற்பட்டு கிளை அலுவலகத் திறப்புக்கள் என மும்முரமாக அரசியல் முன்னெடுப்புகளை மேற்கொண்டு வரும் சூழ்நிலையில் உட்கட்சிப் போட்டிகள், விருப்புவாக்கு சண்டைகள் எதிரணியுடனான முரண்பாடுகள், தேர்தல் வன்முறைகள், சட்டத்துக்கு முரணான செயற்பாடுகளும் ஆங்காங்கே பரவலாக நடைபெற்றும் வருகிறது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
46 minute ago
14 May 2025
14 May 2025
14 May 2025