2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய மூவருக்கு விளக்கமறியல்

Sudharshini   / 2016 ஜனவரி 31 , மு.ப. 11:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.ஜமால்டீன்

தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவன் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய  3 சந்தேக நபர்களையும் எதிர்வரும்11ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு அக்கரைப்பற்று மாவட்ட நீதிமன்ற நீதிபதியும் மேலதிக  நீதவான் நீதிமன்ற நீதிபதியுமான திருமதி நளினி கந்தசாமி, சனிக்கிழமை (30) உத்தரவிட்டார்.

இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

தென்கிழக்கு பல்கலைக்கழக கலைப்பிரிவின்  இறுதி ஆண்டு மாணவன் ஏ.எம்.அஸ்வர், கடந்த 29ஆம் திகதி சக மாணவர்களுடன் பல்கலைக்கழக வளாகத்தில் இருந்த போது, இரு மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் தலைக்கவசத்தினால் அஸ்வரின் தலையின் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.

தாக்குதலுக்குள்ளான மேற்படி மாணவன், மயக்கமான நிலையில் ஒலுவில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

இச்சம்பவம் குறித்து வைத்தியசாலை பொலிஸாரிடம் செய்த முறைப்பாட்டையடுத்து, பொலிஸார் தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்;கள் இருவர் உட்பட மூவரை கைது செய்து  நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தினர். கைதான மூவரும் சம்மாந்துறைப்பிரதேசத்தைச் சேர்ந்தவர்;கள் என விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

கடந்த 26 ஆம் திகதி தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் நடந்த மாணவர்; பேரவைக்கு, அங்கத்தவர்;களை தெரிவு செய்வதற்கான  தேர்தலில் அஸ்வர்;;  உட்பட 13 பேர்; தெரிவு செய்யப்பட்டனர்;. இதன்போது  தெரிவு செய்யப்படாத மாணவர்களுக்கும் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கும் இடையில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாகவே, இத்தாக்குதல் சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது. இச்சம்பவம் தொடர்பாக அக்கரைப்பற்று பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

 

   


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X