2025 மே 21, புதன்கிழமை

தேசிய காங்கிரஸின் 12ஆவது பேராளர் மாநாடு

Gavitha   / 2016 ஏப்ரல் 21 , மு.ப. 05:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.றஹ்மத்துல்லா,றியாஸ் ஆதம்

'தேசிய காங்கிரஸின் 12ஆவது பேராளர் மாநாடு நாளை சனிக்கிழமை (23) காலை 9.30 மணியளவில், அக்கரைப்பற்று அதாஉல்லா அரங்கில் நடைபெறவுள்ளது' என்று தேசிய காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான எம்.எஸ்.உதுமாலெப்பை தெரிவித்தார்.

தேசிய காங்கிரஸின் தேசிய தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஏ.எல்.எம்.அதாஉல்லா தலைமையில் நடைபெறவுள்ள இந்த நிகழ்வில், கட்சியின் முக்கியஸ்தர்கள், கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள், பிரதேச அமைப்பாளர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.

இந்த நிகழ்வின் போது, கட்சி எதிர்நோக்கியுள்ள சவால்கள், கட்சி புனரமைப்பு வேலைத்திட்டம் மற்றும் கட்சியின் எதிர்கால நடவடிக்கைகள், புதிய அரசியல் மறுசீரமைப்புத் திட்டம் தொடர்பில் கட்சியினால் வழங்கப்படவுள்ள ஆலோசனைகள் முன்மொழிவுகள் தொடர்பில் கருத்துப் பரிமாறல்கள் இடம்பெறவுள்ளன.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X