Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2016 மார்ச் 02 , மு.ப. 04:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.ஹனீபா
அம்பாறை மாவட்டத்திலுள்ள தமிழ், முஸ்லிம் தொண்டர் ஆசிரியர்களுக்கு நிரந்தர நியமனங்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கிழக்கு மாகாணசபை உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெப்பை கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று புதன்கிழமை விடுத்துள்ள அறிக்கையில், 'தற்போது அம்பாறை மாவட்டத்தில் 109 தமிழ், முஸ்லிம் தொண்டர் ஆசிரியர்கள் உள்ளனர். நீண்டகாலமாக எந்தவிதக் கொடுப்பனவுமின்றி அம்பாறை மாவட்டத்திலுள்ள பாடசாலைகளில் தமிழ், முஸ்லிம் தொண்டர் ஆசிரியர்கள் பணியாற்றி வந்தனர்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
'தொண்டர் ஆசிரியர்களுக்கான நேர்முகப் பரீட்சைகள் 2001, 2005, 2006, 2007, 2009ஆம் ஆண்டுகளில் அம்பாறை, சம்மாந்துறை, கல்முனை, அக்கரைப்பற்று வலயக் கல்வி அலுவலகங்களில் நடைபெற்றன. நேர்முகப் பரீட்சைகளில் தோற்றிய சிங்களமொழித் தொண்டர் ஆசிரியர்களுக்கு நிரந்தர நியமனங்கள் வழங்கப்பட்டன. ஆனால் தமிழ், முஸ்லிம் தொண்டர் ஆசிரியர்களுக்கு நியமனங்கள் வழங்கப்படவில்லை.
இதனால் தமிழ், முஸ்லிம் தொண்டர் ஆசிரியர்கள் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த தொண்டர் ஆசிரியர்கள் தொடர்பான கோரிக்கையை முன்வைக்கவில்லை என்ற யதார்த்தத்தை ஏனையோர் உணர வேண்டும். ஆனால், வௌ;வேறு காரணங்களால் சில பிரதேசங்களில் பெரும்பான்மையினத் தொண்டர் ஆசிரியர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கும் நியமனம் வழங்க வேண்டும். எனவே, தொண்டர் ஆசிரியர்களுக்கு நிரந்தர நியமனங்களை வழங்குவதற்கு கிழக்கு மாகாணசபை நடவடிக்கை எடுக்க வேண்டும்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
29 minute ago
55 minute ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
55 minute ago
4 hours ago