Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Suganthini Ratnam / 2016 மே 26 , மு.ப. 07:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.கார்த்திகேசு,வி.சுகிர்தகுமார்
அம்பாறை, திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட தாண்டியடிக் கிராமத்தில் ஐந்து ஏக்கர் நிலப்பரப்பில் நிர்மாணிக்கப்படவுள்ள வீடமைப்புத் தொகுதிக்கான அடிக்கல்லை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் இன்று வியாழக்கிழமை நாட்டிவைத்தார்.
வீடுகள் இன்றி வாழ்ந்துவருகின்ற 25 குடும்பங்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளன. ஒவ்வொரு பயனாளிக்கும் 20 பேர்ச் காணியில் தனித்தனியாக இரண்டு அறைகள், ஒரு வரவேற்பு அறை ஆகியவற்றுடன் வீடுகள் நிர்மாணித்துக் கொடுக்கப்படவுள்ளதுடன், வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சின் ஊடாக நீண்டகால இலகு கடன் முறையில்; ஒவ்வொரு வீட்டுக்கும் இரண்டு இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்படவுள்ளது.
மேலும், இந்த வீட்டுத்தொகுதியுடன் முன்பள்ளி, கோவில், மின்சாரம், குடிநீர், பாதை வசதி உள்ளிட்டவையும் செய்து கொடுக்கப்படவுள்ளன.
இங்கு உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர், 'இந்த நல்லாட்சி அரசாங்கத்தில் வீடுகள் இல்லாது துன்பப்படும் அம்பாறை மாவட்ட தமிழ் மக்கள் அனைவருக்கும் சொந்த வீடுகளில் மகிழ்ச்சியாக வாழ்வதற்கான சந்தர்ப்பம் பெற்றுக் கொடுக்கப்படும்.
இந்த நல்லாட்சி அரசாங்கம் தமிழ் மக்களின் பிரச்சினைகளை கருத்தில் கொண்டு அவர்களுக்கான குறைகளை நிவர்த்தி செய்து அவர்களும் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்ற சிந்தனைகள் மெது மெதுவாக துளிர்விட ஆரம்பித்துள்ளன. இதனை நாம் சரியாக பயன்படுத்தி உங்களுக்கான தேவைகளை சரிசெய்து மகிழ்சியான வாழ்க்கையை ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில் செயற்பட்டு வருகின்றோம்' என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
8 minute ago
15 minute ago
21 minute ago