2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சர்வதேச ஆய்வு மாநாடு

Princiya Dixci   / 2015 டிசெம்பர் 22 , மு.ப. 09:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே. றஹ்மத்துல்லா

பல்கலைக்கழகங்களில் இடம்பெற்று வரும் சர்வதேச ஆய்வு மாநாடுகள், கல்வியலாளர்களுக்கும் கல்வியைத் தேடிக்கற்றுவருபவர்களுக்கும் ஒரு வரப்பிரசாதமாக அமைகின்றது என தென்கிழக்குப் பல்கலைக்கழக உப வேந்தர் எம்.எம்.எம்.நாஜிம் தெரிவித்தார்.

'தென்கிழக்குப் பலக்லைக்கழகத்தின் கலை, கலாசாரப் பிரிவின் நான்காவது சர்வதேச பல்துறை ஆய்வுகள், நடைமுறைகள் போன்றவைகளின் தற்காலப்போக்கு' எனும் கருப்பொருளில் பல்கலைக்கழகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (22) நடைபெற்ற ஆய்வு மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
 
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

எமது பல்கலைக்கழகத்தில் இடம்பெறும் இவ்வாறான சர்வேதச ஆய்வு மாநாடுகள் ஏனைய உயர் கல்வி நிறுவனங்களுக்கும் பல்கலைக்கழகங்களுக்கும் எடுத்துக்காட்டாக அமைய வேண்டும்.
 
மேலும், கிடைக்கப்பெறும் இச்சந்தர்ப்பங்களில் பங்குகொண்டு சமர்ப்பிக்கப்படுகின்ற கட்டுரைகள், ஆய்வுகள் மற்றும் ஏனைய ஆக்கங்கள் அவர்களுக்கு என்றும் மறையாத ஒரு சான்றாகவும் அமைகின்றது. இவ்வாறான நற்சான்றுகள் அவர்களின் கல்வி நிலை, அறிவுத் திறன் போன்றவற்றையும் புடம் போட்டுக்காட்டுகின்றன.
 
எனவே, கிடைக்கப்பெறும் இவ்வாறான சந்தர்ப்பங்களை ஒரு வரப்பிரசாதமாகக் கொண்டு உச்சப்பயன்களை அடைய வேண்டும் என்றார்.
 
இவ்வாய்வு மாநாட்டில் உள்நாட்டு மற்றும் இந்தியா, கொரியா மற்றும் மலேசியா போன்ற நாடுகளின் பல்கலைக்கழகங்களின் ஆய்வாளர்கள் கலந்துகொண்டமை விசேட அம்சமாகும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X