2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

திருக்கோவிலில் பல வேலைத்திட்டங்கள்

Suganthini Ratnam   / 2015 டிசெம்பர் 22 , மு.ப. 06:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கார்த்திகேசு

அம்பாறை, திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட 22 கிராம அலுவலர் பிரிவுகளிலும் வறுமைக் கோட்டுக்கு கீழுள்ள 4,747 குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் பல வேலைத்திட்டங்கள் இவ்வருடத்தில் முன்னெடுக்கப்பட்டதாக அப்பிரதேச சமூர்த்தி முகாமையாளர் வி.அரசரெத்தினம் தெரிவித்தார்.

2015ஆம் ஆண்டு திருக்கோவில் பிரதேச செயலகப் பிரிவில் மக்களுக்கு சிறப்பாக பணிகளைச் செய்த  சமூர்;த்தி உத்தியோகஸ்தர்களை கௌரவிக்கும் நிகழ்வு, பிரதேச செயலகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

திருக்கோவில் பிரதேச செயலகப் பிரிவில் வறுமைக் கோட்டுக்கு கீழ் அதிகளவான குடும்பங்கள் உள்ளன. இங்குள்ள மக்கள் பயனடையக்கூடிய வகையில் பல வேலைத்திட்டங்களை முன்னெடுக்கப்பட்டன.  இந்நிலையில், 97 பயனாளிகளுக்கு சுமார் 27 இலட்சம் ரூபாய் செலவில் வாழ்வாதார உதவிகளையும் 04 பயனாளிகளுக்கு திரியபியச வீடு அமைப்புக்காக  03  இலட்சமும் ரூபாயும் வழங்கப்பட்டன. அத்துடன், 4,747 குடும்பங்களுக்கு சமூர்த்தி முத்திரைகளும் பெற்றுக்கொடுக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X