2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

தாலிக் கொடியை வைத்தவருக்கு விளக்கமறியல்

Gavitha   / 2016 பெப்ரவரி 07 , மு.ப. 05:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எச்.ஏ. ஹுஸைன்

4 பவுண் தாலிக் கொடியைத் திருடி, வங்கியில் அடைவு வைத்ததார் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர், 14 நாள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கடந்த 4ஆம் திகதி வியாழக்கிழமை மாலை கைது செய்யப்பட்ட இந்த நபரை,  ஏறாவூர் பொலிஸார் ஏறாவூர் சுற்றுலா நீதிவான் நீதிமன்றில் வெள்ளிக்கிழமை ஆஜர்படுத்திய போது, நீதவான் எம்.ஐ.எம். றிஸ்வி மேற்கண்டவாறு உத்தரவைப் பிறப்பித்தார்.

கொம்மாதுறை வாசிகசாலை வீதியிலுள்ள வீடொன்றில் 4 பவுண் தாலிக்கொடியை திருடிய குற்றச்சாட்டின் பேரில் 33 வயதான குடும்பஸ்தர் ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள களுவன்கேணி சீநோர் வீட்டுத் திட்டப் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தார்.

இவரிடம் விசாரணை மேற்கொண்டபோது வீட்டுக்குள் புகுந்து அலுமாரியைத் திறந்து அதனுள் வைக்கப்பட்டிருந்த 4 பவுண் தாலிக் கொடியை திருடிச் சென்று செங்கலடியிலுள்ள வங்கியொன்றில் அடைவு வைத்திருப்பதாக தெரிவித்துள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X