2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

திவிநெகும உத்தியோகத்தர்களுக்கான ஆட்சேர்ப்பு பயிலரங்கு

Gavitha   / 2016 பெப்ரவரி 26 , மு.ப. 06:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹூஸைன்

நாடு தழுவிய ரீதியில் இடம்பெறவுள்ள வாழ்வின் எழுச்சி திவிநெகும உத்தியோகத்தர்களுக்கான ஆட்சேர்ப்புப் போட்டிப் பரீட்சைக்குரிய பயிலரங்கு, நாளை சனிக்கிழமை 27.02.2016 காலை 10 தொடக்கம் பிற்பகல் 4 மணிவரை அக்கரைப்பற்று தொழிநுட்பக் கல்லூரியில் இடம்பெறவுள்ளதாக வளவாளரான சட்டத்தரணி எம்.ஐ. உவைஸுர் ரஹ்மான் தெரிவித்தார்.

கிராமிய பொருளாதாரம் மற்றும் கிராமிய வாழ்வாதார அபிவிருத்தி சம்பந்தமான பாட விளக்கங்களை சமுர்த்தி சிரேஸ்ட முகாமையாளர் எம். அலியார் வழங்கவுள்ளார்.

அதேவேளை, பொது அறிவு, பொது உளச்சார்பு விடயதானங்களை சட்டத்தரணி உஸை{ர்ரஹ்மான் வழங்கவுள்ளார்.

அக்கரைப்பற்று தொழிநுட்பக் கல்லூரி மாணவர்களுக்காக சேவை அடிப்படையில் இந்த பயிலரங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பிரத்தியோக மாணவர்களும் இந்தப் பயிலரங்கில் பங்குபற்ற விரும்பினால் அக்கரைப்பற்று பிராதான வீதியில் அமைந்துள்ள தொழிநுட்பக் கல்லூரி மாணவர்களுடனோ அல்லது 0777761477 என்ற அலைபேச இலக்கத்துடனோ தொடர்புகொண்டு வருகைப் பதிவை உறுதிப்படுத்திக்கொள்ளலாம்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X