2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

நடமாடும்சேவை

Suganthini Ratnam   / 2015 டிசெம்பர் 01 , மு.ப. 05:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வி.சுகிர்தகுமார்  

சட்ட ரீதியாக பதிவுத்திருமணத்தை இலவசமாக மேற்கொள்வதற்கான நடமாடும்சேவை ஐரோப்பிய ஒன்றிய நிதியத்தின்; உதவியுடன் எதிர்வரும் 05ஆம் திகதி காலை 08.30 மணி முதல் மாலை 4.15 மணிவரை திருக்கோவில் பிரதேச கலாசார மண்டபத்தில் மீளவும் நடைபெறவுள்ளதாக சட்ட உதவி ஆணைக்குழுவின் அம்பாறை மாவட்ட திட்ட உத்தியோகஸ்தர் பி.எம்.கலாமுதீன் தெரிவித்தார்.

அத்துடன் பிறப்பு, இறப்பு பதிவுகள் மேற்கொள்வதில் தீர்க்க முடியாமலுள்ள பிரச்சினைகளுக்கான ஆலோசனை மற்றும் உதவியும் அன்றையதினம் வழங்கப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.

ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவில் 23 குடும்பங்களுக்கு சட்ட ரீதியான பதிவுத்திருமணம் இலவசமாக திங்கட்கிழமை (30) மேற்கொள்ளப்பட்டு, பதிவுச்சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. அவ்வாறே, பொத்துவிலில் 65 குடும்பங்களுக்கும்; திருக்கோவிலில் 24 குடும்பங்களுக்கும் ஏற்கெனவே வழங்கப்பட்டன.  

பதிவுத்திருமணம் மேற்கொள்ளுதல் மற்றும் பிறப்பு, இறப்புச் சான்றிதழ்களைப் பெறுவதற்கான நடமாடும்சேவை எதிர்வரும் 2017ஆம் ஆண்டு மார்ச் மாதத்துடன் நிறைவடையவுள்ளதாகவும் அவர் கூறினார். எனவே, இதுவரை காலமும் பதிவுத்திருமணங்கள் மேற்கொள்ளாமலுள்ள குடும்பங்கள்; இனங்காணப்பட்டு அவர்களுக்கு பதிவுத்திருமணங்கள் இலவசமாக மேற்கொள்ளப்படுமெனவும் அவர் கூறினார்.  

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X