2025 மே 21, புதன்கிழமை

நம்பிக்கை நிதிய நிந்தவூர் பிரதேச சங்கத்தின் 15ஆவது வருடாந்தப் பொதுக்கூட்டம்

Gavitha   / 2016 ஏப்ரல் 21 , மு.ப. 04:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம். ஹனீபா

'அரச சேவை ஓய்வூதியர்களின் நம்பிக்கை நிதிய நிந்தவூர்ப் பிரதேச சங்கத்தின் 15ஆவது வருடாந்தப் பொதுச் சபைக் கூட்டம், எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (24), நிந்தவூர் அல்- மஸ்ஹா பெண்கள் உயர்தரப் பாடசாலை, மர்ஹூம் அஷ்ரப் ஞாபகார்த்த கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது' என்று  அரச சேவை ஓய்வூதியர்களின் நம்பிக்கை நிதிய நிந்தவூர்ப் பிரதேச சங்கத்தின் செயலாளர் ஏ.எல்.எம். அமீன் வியாழக்கிழமை (21) தெரிவித்தார்.

நிந்தவூர் பிரதேச சங்கத் தலைவர் ஏ.எல்.எம். பஷீர் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில், ஓய்வு பெற்ற மாகாண கல்வி பணிப்பாளர் ஐ.எம். இஸ்ஸடீன் பிரதம அதிதியாகவும் நிந்தவூர் பிரதேச செயலாளர் ஆர்.யூ. அப்துல் ஜலீல், ஓய்வு பெற்று பிரதிக் கல்விப் பணிப்பாளர் சட்டத்தரணி எம்.சி. ஆதம்பாவா, நிந்தவூர் மக்கள் வங்கி முகாமையாளர் பி. நஸ்ருடீன் ஆகியோர் கௌரவ அதிதியாகவும் கலந்து கொள்ளவுள்ளனர்.
 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X